Home / உலகம் / அவுஸ்ரேலியா /

ஆஸ்திரேலியாவில் விமானம் வணிக வளாகத்தில் மோதி விபத்து

Posted On : March 11, 2017

ஆஸ்திரேலியாவில் விமானம் வணிக வளாகத்தில் மோதி வெடித்து சிதறியதில் 5 பேர் பலியானார்.மெல்போர்னில் உள்ள எசண்டன் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய இரண்டு இன்ஜின்கள் கொண்ட பீச்கிராப்ட் சூப்பர் கிங் என்ற சிறிய விமானம் கிளம்பியவுடன், விமான நிலையம் அருகில் உள்ள வணிக வளாகம்மீது மோதி வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 5 பேர் பலியானார்கள்.

 

வணிக வளாகத்தில் இருந்த சிலர் காயமடைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார். இன்ஜின் கோளாறு காரணமாக விமானம் விபத்திற்குள்ளானதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் மோதியதி்ல் வணிக வளாகம் தீ பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்