Home / உலகம் / ஐரோப்பா /

இஸ்தான்புல் புறநகர் பகுதியில் ஹெலிக்கொப்டர் விபத்து: ஐவர் உயிரிழப்பு

Posted On : March 11, 2017

உயர்மட்ட வணிக நிர்வாகிகளுடன் சென்ற ஹெலிக்கொப்டர் ஒன்று இஸ்தான்புல் புறநகர் பகுதியில் தொலைக்காட்சி கோபுரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்தான்புல் அட்டாதுர்க் விமான நிலையத்திலிருந்து ஏழு பேருடன் சென்ற Sikorsky S-76 என்ற குறித்த விமானமே இன்று (வெள்ளிக்கிழமை) இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. இதன்போது, தொலைக்காட்சி கோபுரத்தில் மோதிய ஹெலிக்கொப்டர் நெடுஞ்சாலையில் வீழ்ந்து நொருங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்து துருக்கி உள்ளூர் ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவல்களின் பிரகாரம், குறித்த ஹெலிக்கொப்டரில் மூன்று துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்களும், நான்கு ரஷ்யர்களும்; இரண்டு விமானிகளும் பயணம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உயிரிழந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்