Home / உலகம் / ஐரோப்பா /

எதிர்காலத்தில் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையலாம்: ஜேன் கிளாட் ஜங்கர்

Posted On : March 11, 2017

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகினாலும் எதிர்காலத்தில் அது மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜேன் கிளாட் ஜங்கர் (Jean-Claude Juncker) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேற்குறித்த கருத்தினை அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஜங்கர் கருத்து தெரிவித்த போது, “ஐரோப்பிய ஒன்றியம் எனும் கப்பலில் பயணிப்பது தொடர்பில் எதிர்காலத்தில் பிரித்தானியா மீண்டும் சிந்திக்கும்” என தெரிவித்தார்.

இந்நிலையில் ஜங்கருடைய கருத்திற்கு பதிலளித்த யூகிப் கட்சியின் (UKIP) முன்னாள் தலைவர் நைஜல் பராஜ் (Nigel Farage  ), “ஐரோப்பிய ஒன்றியம் எனும் கப்பல் ஒன்றே எதிர்காலத்தில் இருக்காது” என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்