Home / உலகம் / கனடா /

ஒன்ராறியோவில் 300 பாடசாலைகளுக்கு மூடுவிழா: கல்வி அமைச்சர் தகவல்

Posted On : March 11, 2017

ஒன்ராறியோ மாகாணத்தில் சுமார் 300 பாடசாலைகள் மூடப்படலாம் என ஒன்ராறியோவின் கல்வி அமைச்சர் மிட்சி ஹன்ரர் கூறியுள்ளார்.

பாடசாலைகள் மூடப்படுவதை தள்ளிப்போடுமாறும், எந்த பாடசாலைகள் மூடப்படும் என்ற தகவலை வழங்குமாறும் கோரியிருந்த நிலையில், அமைச்சர் மிட்சி ஹன்ரர் அதற்கு பதில் கூற மறுத்துவிட்டார்.

மேலும், எதிர்வரும் செவ்வாய்கிழமை மூடப்படவுள்ள பாடசாலைகள் குறித்த தன்னிச்சையான எண்ணிக்கையை கொடுக்க முடியாதென கூறிய அமைச்சர் மிட்சி ஹன்ரர், 300 பாடசாலைகள் சம்பந்தப்பட்ட 43 மதிப்பாய்வுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், 2016-17ஆம் கல்வி ஆண்டில் 19 பாடசாலைகளை மூடுவதற்கு பாடசாலை சபை தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Comments

தொடர்புடைய செய்திகள்