Home / உலகம் / ஐரோப்பா /

ஜேர்மனி புகையிரத நிலையத்தில் கோடாரித் தாக்குதல்: ஆறுபேர் காயம், இருவர் கைது

Posted On : March 11, 2017

மேற்கு ஜேர்மனியின் ட்யூசெல்டோர்ஃப் நகர பிரதான புகையிரத நிலையத்தில் ஒருவர் கோடாரியால் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது ஆறு பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மேற்படி சம்பவம் ஒரு வெறித்தனமான தாக்குதல் என்று மத்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தாக்குதலுக்கான காரணம் குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

யாரும் எதிர்பாராத வகையில் இடம்பெற்ற இந்த தாக்குதலை அடுத்து, புகையிரத நிலையம் மூடப்பட்டு பொலிஸார் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்ததோடு புகையிரத சோவைகள் யாவும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தெற்கு ஜேர்மனியில் இடம்பெற்ற இதுபோன்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் பெருமளவான பயணிகள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்