Home / உலகம் / அவுஸ்ரேலியா /

நிறைகூடிய குழந்தையை உலகிற்கு அறிமுகப்படுத்திய மெல்பேர்ன் தாய்

Posted On : March 11, 2017

அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் நடாசியா கோரிஜன் (Natashia Corrigan)   என்ற தாய் ஒருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) 6.06 கிலோகிராம் நிறையுடைய ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

அசாதாரண நிறையுடன் குழந்தை பிறந்த போதிலும் தாயும் சேயும் நலமாக இருப்பதாக அவரது கணவர் பிரைய்ன் (Brian)  தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடாசியா கோரிஜன் தெரிவிக்கையில், ‘ சிறிது குண்டான குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்பினேன். எனினும் அதிக குண்டான குழந்தை பிறந்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குழந்தையின் உடல் உடை அசாதாரணமாக காணப்பட்ட போதிலும் தாய்க்கு சாதாரண சுகபிரசவமாகவே குழந்தை பிறந்துள்ளது.

இந்த விடயம் தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நடாசியா கோரிஜன் தெரிவித்துள்ளார்.

குறித்த குழந்தை 40 வாரங்கள் மற்றும் 05 நாட்களில் பிறந்துள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Comments

தொடர்புடைய செய்திகள்