Home / உலகம் / ஐரோப்பா /

பெலாரஸில் வரி வசூலிப்பு தற்காலிக இடைநிறுத்தம்

Posted On : March 11, 2017

பெலாரஸில் முழுநேர வேலையில் ஈடுபடாத மக்களிடம் வரி வசூலிப்பதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அந்நாட்டின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுக்காஷேங்கோ அறிவித்துள்ளார்.

பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அரச தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி மேற்படி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வருடத்திற்கு 183 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிவோருக்கு 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து வரி வசூலிப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் குறித்த வரி வசூலிப்பானது முற்றாக அகற்றப்படவில்லை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பெலாரஸில் வருமான இழைப்பை ஈடுசெய்யும் வகையில் மக்கள் ஒவ்வொருவரும் நஷ்ட ஈடாக 250 டொலர் செலுத்த வேண்டும் என்;ற நடைமுறை கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் இதற்கு எதிராக கடந்;த மாதம் வெகுஜன எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் இந்த மாதமும் பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் மின்ஸ்கில் இடம்பெற்ற அரச தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி மேற்படி தீர்மானத்தினை அறிவித்துள்ளார்.

அதேவேளை அரச அதிகாரிகளின் உத்தரவை மீறி வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வரி விதிப்பு ஆய்வின் பிரகாரம், 4 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் வரிப்பணம் செலுத்தியிருக்க வேண்டும் எனினும் 50 ஆயிரம் பேர் மாத்திரமே வரி செலுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

தொடர்புடைய செய்திகள்