Home / உலகம் / ஐரோப்பா /

மனநலம் பாதிக்கப்பட்டவரே கோடாரித் தாக்குதலை நடத்தியுள்ளார்: பொலிஸார்

Posted On : March 11, 2017

ஜேர்மனியின் டஸ்சல்டோர்ஃப் (Duesseldorf) நகர ரயில் நிலையத்தில் கோடாரித் தாக்குதல் நடத்தியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என ஜேர்மனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னரே மேற்குறித்த தகவல் நேற்று (வெள்ளிக்கிழமை) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸார், “டஸ்சல்டோர்ஃப் கோடாரித் தாக்குதலை நடத்தியவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். அத்துடன் குறித்த தாக்குதலை அவர் தன்னிச்சையாகவே மேற்கொண்டுள்ளார்” என தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட குறித்த கோடாரித் தாக்குதல், 36 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரால் நடத்தப்பட்டது எனவும் கூர்மையான கோடாரி ஒன்றினால் அருகில் இருந்தவர்களை அவர் தாக்கியதில் ஆறு பேர் உயிரிழந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தாக்குதலை நடத்தியதன் பின்னர், அவர் அங்கிருந்த பாலத்திலிருந்து பாய்ந்து தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த தாக்குதலால் படுகாயமடைந்தவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Comments

தொடர்புடைய செய்திகள்