Home / உலகம் / ஜேர்மனி /

உச்சக்கட்ட பதட்டத்தில் ஜேர்மனி மக்கள்! என்ன செய்ய போகிறது அரசு?

Posted On : March 12, 2017

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தகவல் வந்ததால் ஜேர்மனியின் முக்கிய ஷொப்பிங் மால் மூடப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் தாக்குதல்கள் நடத்தலாம் என சமீபத்தில் உளவு துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், அங்கு உள்ள புகழ்பெற்ற Limbecker Platz ஷொப்பிங் மாலின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அதிர்ச்சி தகவலை நேற்று உளவு துறை வெளியிட்டது.

இதையடுத்து மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் அந்த ஷொப்பிங் மாலை மூட பொலிசார் உத்தரவிட்டனர்.

அதன்ப்படி அந்த மால் தற்போது மூடப்பட்டுள்ளது. பொலிசார் சந்தேகம் படும் படி இருக்கும் சிலரை பிடித்து விசாரித்துள்ளனர்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் சந்தையில் ஐ.எஸ் தீவிரவாதி லொறி மூலம் நடத்திய கொடூர தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தார்கள்.

இந்நிலையில் மீண்டும் ஜேர்மனிக்கு தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை விடுத்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்