Home / உலகம் / கனடா /

நியுயோர்க்கின் தலைமை அரச வழக்கறிஞர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்

Posted On : March 12, 2017

 

நியுயோர்க்கின் தலைமை அரச வழக்கறிஞரான ப்ரீத் பஹாரா (Preet Bharara) பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகிய செய்திகள் தெரிவிக்கின்றன.

ப்ரீத் பஹாராவுடன் மேலும் 45 அமெரிக்க அரச வழக்கறிஞர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்ட பல அரச வழக்கறிஞர்களை பணியில் இருந்து நீக்கும் பொருட்டே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த ப்ரீத், “நான் பதவியில் இருந்து விலகவில்லை. என்னை பதவியில் இருந்து நீக்கி விட்டார்கள். ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், நான் அவரை நேரில் சந்தித்து உரையாடினேன்.

அப்போது நான் தொடர்ந்தும் பதவியில் இருக்க வேண்டும் என ட்ரம்ப் என்னிடம் தெரிவித்தார்.

தற்போது பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களின் பட்டியலில் எனது பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஒரே தடவையில் இவ்வாறு பல நீதிபதிகள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளமை பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்

 

Comments

தொடர்புடைய செய்திகள்