Home / உலகம் / பிரான்ஸ் /

பாரீஸில் மீண்டும் பரபரப்பு: ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை

Posted On : March 12, 2017

பிரான்ஸ் நாட்டில் அமெரிக்காவை சேர்ந்த இருவரிடம் ரூ.6 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையிட்ட மர்ம நபர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் தான் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாரீஸில் உள்ள Place Vendome என்ற பகுதியில் நகைகள் விற்பனை மிக பிரபலமானது.

இதே பகுதியில் அமெரிக்காவை சேர்ந்த இருவர் நகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை 8 மணியளவில் கடையை பூட்டிவிட்டு சில நகைகளை தங்களுடன் இருவர் கொண்டு சென்றுள்ளனர்.

கீழ் தளத்தில் இருந்த கார்கள் நிறுத்தும் இடத்திற்கு சென்றபோது திடீரென அங்கு இருவர் வந்துள்ளனர்.

பின்னர், இருவரையும் மிரட்டிய மர்ம நபர்கள் அவர்களிடம் இருந்த நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

எனினும், இருவரும் கொள்ளையர்களால் தாக்கப்பட்டார்களா என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

பொலிசார் நடத்திய விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு 4,00,000 யூரோ(6,46,64,332 இலங்கை ரூபாய்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இருவரிடம் தகவல்களை பெற்ற பொலிசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க மொடலான கிம் கர்தஷியான் என்பவரை துப்பாக்கி முனையில் தாக்கி சுமார் 10 மில்லியன் யூரோ மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்