Home / உலகம் / பிரித்தானியா /

போதை பொருட்களால் சாலையில் தள்ளாடும் பிரித்தானிய மக்கள்! பகீர் தகவல்கள்

Posted On : March 12, 2017

பிரித்தானியாவில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த போதை பொருட்கள் எளிதாக கிடைப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Lancashire கவுண்டியில் இருக்கும் புகழ்பெற்ற கடற்கரையோர Resort Blackpool அருகில் சக்தி வாய்ந்த போதை பொருட்கள் வெறும் £10 விலையில் கிடைக்கிறது.

Spice எனப்படும் இந்த போதை பொருளை தொடர்ந்து சாப்பிட்டால் உயிரிழப்பு, வலிப்பு, ஒவ்வாமை போன்ற உடல்நல பிரச்சனைகள் மற்றும் இருட்டடிப்பு போன்ற சம்பவங்களும் நடைபெறுகின்றன.

வீடு இல்லாமல் சாலையில் வசிப்பவர்களே இதை அதிகம் உட்கொள்ளுகின்றனர். இதை சாப்பிடும் Lee என்னும் இளைஞன் கூறுகையில், Spice எளிதாக கிடைக்கும்.

இதோ பாருங்கள் என கூறி அருகிலிருக்கும் வீட்டிலிருந்து பையில் எடுத்து வந்து அதை காட்டுகிறார்.

அதே போல Manchester மற்றும் Bristol பகுதிகளிலும் போதை வஸ்து விற்பனை கொடிக்கட்டி பறக்கிறது.

இதை சாப்பிடும் மக்கள் ஆங்காங்கே மயக்க நிலையில் விழுந்து கிடப்பதையும், சாலையில் நடக்க முடியாமல் திணறுவதையும் அதிகம் காண முடிகிறது.

இதை தொடர்ந்து சாப்பிட்டு வருகிறவர்களுக்கு இது கிடைக்கவில்லையெனில், பிச்சை எடுப்பது, அடுத்தவர்களை கொலை செய்யும் மன நிலைக்கு கூட தள்ளப்படுவார்கள் என்ற பகீர் தகவலும் தெரியவந்துள்ளது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை தொடர்ந்து கைது செய்து வருகிறோம்.

ஆனாலும், இது தொடரவே செய்கிறது. தொடர்ந்து இதை தடுக்க போராடி வருகிறோம் என கூறியுள்ளனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்