Home / உலகம் / சுவிஸ் /

மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த நபர்: இரண்டு பெண்களை கைது செய்த பொலிஸ்

Posted On : March 12, 2017

சுவிட்சர்லாந்து நாட்டில் நபர் ஒருவர் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் சூரிச் மாகாணத்தில் உள்ள Niederdorf என்ற பகுதியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று மாலை 6.15 மணியளவில் சாலையில் சிலர் நடந்துச் சென்றபோது ஓரிடத்தில் நபர் ஒருவர் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தகவல் பெற்று வந்த பொலிசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலத்தை பார்த்தபோது அவர் மாடியில் உள்ள ஜன்னல் வழியாக கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்துள்ளனர்.

விசாரணையிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர், சடலத்தை மருத்துவமனைக்கு பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சந்தேகத்திற்குரிய வீட்டில் சோதனை செய்தபோது அங்கு ரோமானியா நாட்டை சேர்ந்த 29 மற்றும் 40 வயதான இரண்டு பெண்கள் தங்கியிருந்ததை கண்டுபிடித்தனர்.

மேலும், பொலிசார் அவர்களிடம் விசாரணை செய்தபோது இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த பொலிசார் இருவரையும் தற்காலிகமாக கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த நபர் குறித்து பொலிசார் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்