Home / உலகம் / கனடா /

ஆற்றில் விழுந்து உயிருக்கு போராடிய பெண்: துணிச்சலாக செயல்பட்ட பொலிஸ்

Posted On : March 13, 2017

கனடா நாட்டில் பெண் ஒருவர் ஆற்றில் விழுந்து உயிருக்கு போராடியபோது பொலிஸ் அதிகாரி ஒருவர் சரியான நேரத்தில் காப்பாற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள அர்துர் லைங் ஆற்றில் தான் இந்த துணிகரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் இப்பகுதிக்கு வந்த இளம்பெண் ஒருவர் திடீரென ஆற்றில் தவறி விழுந்துள்ளார். பெண் விழுந்ததும் அருகில் இருந்தவர்கள் உதவிக்கேட்டு அலறியுள்ளனர். பொதுமக்களின் அலறல் சத்தம் கேட்ட ஜஸ்டின் லீ என்ற பொலிஸ் அதிகாரி விரைந்து அப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, நடுங்கும் குளிரில் அப்பெண் ஆற்றில் தத்தளிக்கொண்டு இருப்பதை பார்த்து பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

வினாடி நேரமும் சிந்திக்காத பொலிஸ் தான் உடுத்தியிருந்த காவல் உடையுடன் அப்படியே ஆற்றில் குதித்துள்ளார். இந்நிலையில், ஆற்றில் கிடந்த ஒரு நீளமான கட்டையை பிடித்தப்படி இளம்பெண் அலறிக்கொண்டு இருந்துள்ளார். ஆற்றில் குதித்த பொலிஸ் அதிகாரி விரைவாக பெண் அருகில் சென்று அவரது கைகளை பிடித்து தன் தோள் மீது ஏற்றிக்கொண்டார். பின்னர், மெதுவாக கரையை நோக்கி இருவரும் வந்ததும் பெண் மயக்க நிலைக்கு சென்றுள்ளார்.

சரியான நேரத்தில் அங்கு ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததும் பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளார். இக்காட்சிகளை அப்பகுதியில் இருந்த சுற்றுலா பயணிகள் படம் பிடித்துள்ளனர். இளம்பெண் உயிருக்கு போராடியபோது தன்னுயிர் பற்றியும் கவலைப்படாமல் சரியான நேரத்தில் காப்பாற்றிய பொலிஸ் அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்