Home / உலகம் / தொழில்நுட்பம் /

உலக கார் சந்தையில் இந்தியாவுக்கு 3-ஆவது இடம்?

Posted On : March 13, 2017

அடுத்த மூன்று ஆண்டுகளில் உலக கார் சந்தையில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடிக்குமா? ஜப்பானைச் சேர்ந்த சுஸூகி நிறுவனத்துக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. சர்வதேச அரங்கில் சுஸூகி நிறுவனம் அவ்வாறு நம்பிக்கை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது: ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கிய 87-ஆவது மோட்டார் வாகன கண்காட்சி 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பல நாடுகளைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தி வருகின்றன.

இந்த கண்காட்சியில் பங்கேற்று வரும் சுஸூகி மோட்டார் நிறுவனத்தின் மூத்த அதிகாரி கிஞ்சி செயிட்டோ, வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் சர்வதேச அளவில் கார் சந்தையில் இந்தியா 3-ஆவது மிகப்பெரிய நாடாக உருவெடுக்கும் என்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது: இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாக சுஸூகி நிறுவனம் 50 சதவீத பங்களிப்பைக் கொண்டு கார் சந்தையில் முதலிடத்தில் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, மேலும் பல புதிய தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்காக, இந்தியாவில் எங்களது தயாரிப்புகளை 20 லட்சமாக அதிகரிக்கும் வகையில் குஜராத்தில் புதிய ஆலை அமைக்கப்பட்டு உற்பத்தியை தொடங்கியுள்ளோம் என்றார் அவர்.

நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான கால அளவில் மாருதி சுஸýகி 13 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதே சமயம், சுஸூகி மோட்டார் நிறுவனம் கடந்த 2016-இல் உலக அளவில் 29 லட்சம் வாகனங்களை விற்பனை செய்தது.

Comments

தொடர்புடைய செய்திகள்