Home / ஆன்மீகம் /

கடப்பாக்கத்தில் மாசி மக தீர்த்தவாரி

Posted On : March 13, 2017

மதுராந்தகத்தை அடுத்த கடப்பாக்கம் கடற்கரையில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, 40-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து வந்த சுவாமி திருவுருவ சிலைகளைக் காணவும், புனித நீராடவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடற்கரையில் குவிந்தனர்.
செய்யூர் வட்டம், இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உள்பட்ட கடப்பாக்கம் கடற்கரை பகுதியில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
விழாவில், கடப்பாக்கம் திரௌபதி சமேத அர்ஜுன சுவாமி வேணுகோபால், கங்கை பராசக்தி, அருணாசலேஸ்வரர், வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான், விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர், புதுத்தோட்டம் விநாயகப் பெருமான், கடப்பாக்கம் குப்பம் காளியம்மன், பெரியபாளையத்தம்மன் உள்ளிட்ட
40-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவங்கள் மேளதாளங்களுடன், தீர்த்தவாரியில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுவாமி தரிசனத்துக்கு பின்னர், பக்தர்கள் புனித நீராடினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடப்பாக்கம் திரௌபதை சமேத அரிஜுன சுவாமி வேணுகோபால் கோயில் பரம்பரை அறங்காவலர் ஏ.ராஜசேகர் ரெட்டியார் தலைமையில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்