Home / உலகம் / பிரான்ஸ் /

கானாமற்போயுள்ள இளம்பெண்கள் – உதவிகோரும் காவற்துறையினர்!!

Posted On : March 13, 2017

16 மற்றும் 17 வயதுடைய இரண்டு இளம்பெண்கள், நேற்றுச் சனிக்கிழமை மாலையில் இருந்து Pyrénées-Atlantiques இல் காணமற்போயுள்ளனர். இந்தப் பிராந்தியத்தின் ஜோந்தார்மினர், இந்த இளம்பெண்கள் பற்றிய தகவல்களையும் சாட்சியங்களையும் கோரியுள்ளனர்.

Léa மற்றும் Christina  இனும் இந்த இரண்டு பெண்களும், நேறு மாலை 17h00 மணிக்குப் பின்னர், காணமற்போயுள்ளனர். இவர்களின் செல்பெசிகளின் புவியியற்தரவுகள் 19h00 மணியின் பின்னர், இவர்களின் வீட்டிலிருந்து முப்பது கிலோமீற்றர்கள் தூரத்தில் உள்ள Saint-Palais இல் காணமற்போயுள்ளன.

இவர்களிடம் 50யூரோக்கள் மட்டுமே, இருந்ததாகவும், இருவரும் உளவியல் ரீதியாக மிகவும் மென்மையானவர்கள் என்றும் தெரிவித்துள்ள ஜோந்தார்மினர், இவர்கள் பற்றிய விபரங்கள் தெரிந்தால் Mauléon-Licharre ஜோந்தார்மினரை 05 59 19 22 00 எனும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு கோரியுள்ளனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்