Home / உலகம் / பிரான்ஸ் /

நீதிபதிகளை மிரட்டிய ஆப்கான் குடிமகன்!! பதற்றம்!!

Posted On : March 13, 2017

நகரத்தின் நீதிபதிக்க கொலை அச்சுறுத்தல் வழங்கிய குற்றத்திற்காக ஆப்கானிஸ்தான் குடிமகன் ஒருவரிற்கு Grasse (Alpes-Maritimes) குற்றவியல் நீதிமன்றம் 18 மாதச் சிறைத்தண்டனை வழங்கியதோடு, உடனடியாகச் சிறையில் தள்ளி உள்ளது.

நீதிபதிக்குக் கொலை அச்சுறுத்தல் வழங்கிய குற்றத்திற்காக, இவரிற்கு 5 வருடக் கடுங்காவற் சிறைத் தண்டனை வழங்குமாறு அரசப் பிரதிநிதி வழக்கறிஞர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் மீது ஏற்கனவே”S” கண்காணிப்பு, பயங்கரவாதத் தடைப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தமையால், இவரிற்கான தண்டனை உடனடியாக வழங்கப்பட்டிருந்தது.

Muy (Var)  இல் வைத்துக் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய Mohammad Khan Wazi எனும் ஆப்கான் பிரஜை, தனது மகனிற்கு «ஜிகாத்» எனப் பெயரிட்டுள்ளார். இதனால் மூன்று வயதுடைய இந்தச் சிறுவனின் பாதுகாப்பிற்காக, அரசின் சமூக அமைப்பிடம் இந்தச் சிறுவனை, இந்தக் குறிப்பிட்ட நீதிபதி வழங்கி இருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த இந்த ஆப்கான் பிரஜை «நீதிமன்றத்திற்கு வந்து நீதிபதி உட்பட அனைவரையும் AK47 இனால் சுட்டுத் தள்ளுவேன்» என மிரட்டிக் கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தமை குறிப்படத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்