Home / உலகம் / பிரான்ஸ் /

பரிசை மேலும் தூய்மையாக்க புதிய திட்டம்! – ஆன் இதால்கோ அறிவிப்பு!!

Posted On : March 13, 2017

பரிஸ் மிகவும் தூய்மடையந்துள்ளது. ஆனால் இன்னமும் தூய்மையாக வேண்டும் என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ தெரிவித்துள்ளார்.

ஆன் இதால்கோ, பரிஸ் நகரை மேலும் தூய்மையாக்க பல ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளார். பரிசுக்குள் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களை அதிகரிக்க உள்ளார். Journal du Dimanche பத்திரிகைக்கு தெரிவிக்கும் போது, ‘பரிஸ் முன்னரை விட தற்போது தூய்மையடைந்துள்ளது. ஆனாலும் நூறுவீத தூய்மையை இன்னும் எட்டவில்லை!’ என தெரிவித்து, பல திட்டங்களையும் செயற்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் முதல்கட்டமாக 100 துப்பரவு பணியாளர்கள் உடனடியாக பணியில் அமர்த்தப்பட உள்ளனர் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த வருட இறுதிக்குள் பிரெஞ்சு துப்பரவு தொழிலாளர்களின் எண்ணிக்கை 7000 ஐ தொடும் என உறுதியளித்துள்ளார்.

பரிஸ் முழுவதும் உள்ள பூங்காங்களில் எலி போன்ற சிறிய பிராணிகள் மிக தொல்லை தருவது வாசர்கள் அறிந்ததே. 1.5 மில்லியன் யூரோக்கள் செலவில் அதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்கள், விடுகள் மேலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் எனவும், துப்பரவுத்தொழிலாளர்களால் வருடத்துக்கு 150 தொன் சிகரெட் துண்டுகள் அள்ளப்படுகின்றன எனவும் ஆன் இதால்கோ தெரிவித்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்