Home / உலகம் / பிரான்ஸ் /

முகத்தில் எலும்பு முறிவுகளுடன் காவல்துறை அதிகாரி! – மருத்துவமனையில் சிகிச்சை!

Posted On : March 13, 2017

நேற்று சனிக்கிழமை காலை மார்செய்யில் காவல்துறையினர் மேற்கொண்ட கைது நடவடிக்கையின் போது அதிகாரி ஒருவர் மோசமாக தாக்கப்பட்டிருந்தார். இதுகுறித்த செய்தியினை முன்னதாக வழங்கியிருந்தோம்.  இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான பெண் அதிகாரிக்கு முகத்தில் மூன்று எலும்பு முறிவுகள் ஏறட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரியில் முகத்தில் தாக்கிய மூன்று நபர்களும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளனர். நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிகாரி, தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து இன்று அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். முகத்தில் மூன்று காயங்களும் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. 15 நாட்கள் கட்டாய ஓய்வு வேண்டும் எனவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகள் நாளை திங்கட்கிழமை நீதிமன்றில் ஒப்படைக்கப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்