Home / உலகம் / தொழில்நுட்பம் /

4ஜி சேவையை தொடங்குகிறது பி.எஸ்.என்.எல்.

Posted On : March 13, 2017

வரும் 2017-18-ஆம் நிதி ஆண்டின் இறுதிக்குள் 4ஜி சேவையை அறிமுகப்படுத்த பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. அதற்காக, நாடு தழுவிய அளவில் 28,000 புதிய செல்லிடப்பேசி கோபுரங்கள் நிறுவப்படவுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 8-ஆம் கட்ட விரிவாக்க திட்டத்தின்படி, அனைத்து 2ஜி செல்லிடப்பேசி கோபுரங்களுக்கு மாற்றாக நவீன வசதிகளை உள்ளடக்கிய புதிய கோபுரங்களை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளது. நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள செல்லிடப்பேசி கோபுரங்களைக் கொண்டு 3ஜி மற்றும் 4 ஜி சேவைகளை வழங்க முடியும். மேலும், அடுத்த நிதி ஆண்டின் இறுதிக்குள் குறிப்பிட்ட சில பகுதிகளில் 4ஜி சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, 3ஜி அலைக்கற்றையின் ஒரு பகுதியை 4ஜி சேவைக்காக பயன்படுத்தும் திட்டமும் உள்ளது.

செல்லிடப்பேசி கோபுரங்களை அமைக்கும் பணிகளில் ஐரோப்பாவைச் சேர்ந்த நோக்கியா, எரிக்ஸன் மற்றும் சீனாவின் இசட்.டி.இ. ஆகிய நிறுவனங்கள் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளன என்கிறார் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அனுபம் ஸ்ரீவாஸ்தவா.

Comments

தொடர்புடைய செய்திகள்