Home / உலகம் / பிரான்ஸ் /

9 ம் இலக்க மெட்ரோ மோதி ஒருவர் பலி!

Posted On : March 13, 2017

பரிசில் மெட்ரோவில் மோதுண்டு நபர் ஒருவர் பலியாகியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு தொடரூந்து நிலையங்களுக்கு நடுவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு முன்னதாக, Exelmans மற்றும் Michel-Ange / Molitor நிலையங்களுக்கு இடையே, 9 ம் இலக்க  மெட்ரோவில் மோதுண்டு, பலத்த காயங்களுக்கு உள்ளாகி தூக்கி வீசப்பட்டுள்ளார்.  கடமையில் ஈடுபட்டிருத இயந்திர திருத்துனர் ஒருவரால் மீட்புக்குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் மீட்புக்குழுவினரால் குறித்த நபரை உயிருடன் மீட்கமுடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்ட விசாரணைகளில், வேண்டுமென்றே குறித்த நபர் தண்டவாளத்தினுள் வேண்டுமென்றே இறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் இருந்திருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காவல்துறையினர் சம்பவம் தொடர்பான விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்