Home / ஆன்மீகம் /

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

Posted On : March 14, 2017

திருச்சி மாவட்டத்தின் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கியது.
சமயபுரம் மாரியம்மன் கோயில் புகழ் பெற்ற ஒரு அம்மன் கோயிலாகும். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியை நேற்று மாரியம்மன கோயிலில் பூச்சொரிதல் நடைபெற்றது.
இதன் காரணமாக கோயில் நேற்று அதிகாலை விக்னேஷ்வர பூஜை புண்ணியாகவாஜனம் வாஸ்து உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பூக்கள் நிறைந்த தட்டுகள் கூடைகள் கையில் ஏந்தியவர்கள் யானையுடன் மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று காலை 7.45 மணிக்கு காப்புகட்டுதல் நடைபெற்றது.

இதனையடுத்து மாரியம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் குறிப்பாக பெண்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் மாரியம்மனை மனதார வணங்கி வரம் பெற்றுத் திரும்பினர்.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்