Home / சினிமா / இந்திய சினிமா /

“நாங்க பப்ளிக் பிகரு தான்; ஆனா…” -ரசிகருக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை!

Posted On : March 15, 2017
ஒருகாலத்தில்,’ உனக்கு நடிக்கவே வராதுன்னு ‘ நம்ம தமிழ் இயக்குனர் திட்டி விரட்டிய ஹீரோயின் வித்யா பாலன். இப்போ என்னதான் கோடி ரூபாய்க்கு மேலே கொட்டிக்கொடுக்கிறேன்னு சொன்னாலும், அம்மணி ஆசைப்பட்டால் மட்டுமே கால்சீட் வாங்க முடியும்.
அந்த லெவலில் இருக்கிறார் வித்யாபாலன். ஏற்கனவே சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றில் நடித்தவர்.  சமீபத்தில் விபசார தொழில் நடத்தும் தலைவியாக, பேகம் ஜான் படத்தின் ட்ரைலரை பார்த்தவர்கள் ஆடிப்போய் விட்டனர்.
பேகம் ஜான் இயக்குனரும், வித்யா பாலனும், குழுவும்  கல்கத்தாவுக்கு வந்தனர்.ஏர்போர்ட்டில் வித்யா பாலனை  கண்டவுடன் குஷியான அந்த ரசிகர் ஒரு செல்பிக்கு ஆசைப்பட்டுள்ளார்.
ஓகே சொன்னவுடன் வித்யா தோள் மீது கை போட்டு எடுக்க முயற்சிக்க, வித்யா மறுத்திருக்கிறார். மீண்டும் அதே போல செய்ய முனைய, கடுப்பான வித்யா,’நாங்க பப்ளிக் பிகரு தான், ஆனால் பப்ளிக் சொத்து கிடையாது’ன்னு கோபித்து திட்டியுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்