Home / உலகம் / கனடா /

நைஜர் நாட்டிற்கு செல்லவுள்ள கனேடியப் படையினர்

Posted On : March 15, 2017

கியூபெக்கைத் தளமாகக் கொண்ட பிரெஞ்சு மொழி பேசும் 25 கனேடியப் படையினர் குழுவொன்று, மேற்கு ஆபிரிக்க நாடான நைஜர் நாட்டிற்கு செல்லவுள்ளனர்.

சமஷ்டி லிபரல் அரசாங்கத்தின் சர்வதேச அளவில் அமைதிபேணும் கொள்கையின் அடிப்படையில், இந்த இராணுவக் குழு அங்கு செல்லவுள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடியப் படையினர், நைஜர் நாட்டில் சேவையாற்றும் பன்னாட்டுப் படையினருக்கு விசேட பயிற்சிகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

தொடர்புடைய செய்திகள்