Home / சினிமா / இந்திய சினிமா /

பாதுகாப்பு இல்லாத விஷயங்களை இணையத்தில் பெண்கள் பகிரவேண்டாம்’-ஐஸ்வர்யா தனுஷ்

Posted On : March 15, 2017

ஐநாவில் நடைபெற்ற மகளிர் தினவிழாவில் இந்தியாவின் சார்பாக ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் கலந்துகொண்டார்.

ஐநாவில் பேசிய அவர், கலைத்துறையில் பெண்கள் அதிகம் கால் பதிக்க வேண்டும். ஒரு தொழில் முனைவராகவும், தயாரிப்பாளராகவும் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

சகாக்களின் அழுத்தத்தால் எல்லாவற்றையும் ஆன்லைனில் ஷேர் செய்ய வேண்டும் என்றில்லை. ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்றால், அதை இணையத்தில் பகிராதீர்கள் என்று கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷ் ஐநாவில் பதரநாட்டியம் ஆடினார். அது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது  என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்