Home / உலகம் / பிரித்தானியா /

பிரிட்டனில் ‘சீட் பெல்ட்’ பிரசாரம்: இந்திய பெண் முயற்சி

Posted On : March 15, 2017

லண்டன்: காரில் ‘சீட் பெல்ட்’ அணிந்து பயணம் செய்வது குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை, பிரிட்டன் வாழ் இந்திய பெண்மணி துவக்கியுள்ளார். பிரிட்டனில் வசிப்பவர் இந்திய வம்சாவளி பெண் சுக்தி அத்வால். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவரது மகன் அமர், 12, கார் விபத்தில் பலியானார். ‘சீட் பெல்ட்’ அணிந்திருந்தால் மகனை காப்பாற்றியிருக்கலாம் என அத்வால் நம்புகிறார். இந்த நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில், ‘சீட் பெல்ட்’ அணிவது குறித்த பிரசார இயக்கத்தை தொடங்கியுள்ளார்.இவர் கூறுகையில்,” எனது மகனின் இழப்பை ஈடுகட்ட முடியாது. இனி அவன் திரும்பி வரப்போவதில்லை. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விபத்து நடந்த போது பதிவான சி.சி.டி.வி., வீடியோவை ஒளிபரப்புகிறேன். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ‘சீட் பெல்ட்’ அணிய வேண்டும் என்பதே பிரசாரத்தின் நோக்கம்,”என்றார்.

Comments

தொடர்புடைய செய்திகள்