Home / உலகம் / பிரித்தானியா /

பிரித்தானிய மகாராணியின் அங்கீகாரத்தை எதிர்பார்த்திருக்கும் தெரேசா மே

Posted On : March 15, 2017

பிரெக்சிற் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் அங்கீகாரத்தை எதிர்பார்த்திருப்பதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்று சர்வஜன வாக்கெடுப்பு மூலம் கடந்த ஜூன் மாதம் பிரித்தானியா முடிவு செய்தது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை விலக்கும் நடைமுறைகளுக்கான பிரெக்சிற் சட்டமூலம் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயினால் முன்வைக்கப்பட்டது.

குறித்த சட்டமூலத்திற்கு நாடாளுமன்ற கீழ்சபை மற்றும் மேல்சபைகள் தமது ஆதரவினை தெரிவித்துள்ளன.

இந்நிலையில் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மகாராணி எலிசபெத்தின் அனுமதியை எதிர்பார்த்திருப்பதாக தெரேசா மே தெரிவித்துள்ளார். எதிர்வரும்  நாட்களில் ராணி அனுமதி வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments

தொடர்புடைய செய்திகள்