Home / உலகம் / கனடா /

புத்திசாலிகளை வரவேற்றும் கனடிய அரசு

Posted On : March 15, 2017

Global Talent Stream என அழைக்கப்படும் உலகளாவிய ரீதியில் சிறந்த புத்திசாலிகளை கவரும் கனேடிய அரசின் திட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதியன்று ஆரம்பமாக உள்ளது.

கனேடிய அரசு தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தின் ஒரு பகுதியாக, இத்திட்டத்தின் முலம் அதி சிறந்த தொழில் தேர்ச்சி பெற்றோரை (highly skilled talent) குறுகிய காலப் பகுதிக்குள் கனடாவிற்கு வரவழைக்கும் ஒரு முறையைச் செயற்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ் கனடாவில் வேலை அனுமதிக்கான விண்ணப்பங்கள் (work permit applications) இரண்டு வார காலப் பகுதிக்குள் பரிசீலனை செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய விஞ்ஞான மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் நவ்தீப் பேய்ன்ஸ், தொழில் வாய்ப்பு மற்றும் தொழிலாளர் அபிவிருத்தி அமைச்சர் பற்றீசியா ஹஜ்ட்டு ஆகியோர்களால் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எமது அரசின் இத்திட்டத்தின் மூலம் கனேடிய தொழில் வழங்குவோர், உலகெங்கும் இருந்து அதிசிறந்த திறமையுடைய தொழிலாளர்களை துரிதமாகக் கனடாவிற்கு வரவழைக்கக் கூடியதாக இருக்கும் என அமைச்சர் பற்றீசியா ஹஜ்ட்டு தெரிவித்துள்ளார்

 

Comments

தொடர்புடைய செய்திகள்