Home / சினிமா / இந்திய சினிமா /

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் அமலா பாலின் தம்பி

Posted On : March 16, 2017

அமலா பாலின் தம்பி அபிஜித் பால் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகின்றாராம்.

இவர் ஏற்கனவே ஒரு சில மலையாளப் படங்களில் நடித்துள்ளார். மோகன்லால் – அமலா பால் இணைந்து நடித்த ‘லைலா ஓ லைலா’ படம்தான் இவர் அறிமுகமானது.

தமிழில் பிரபுதேவா – தமன்னா நடிப்பில் வெளிவந்த ‘தேவி’ படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், அபிஜித் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கின்றார். இந்தப் படத்தை விஜய் ஸ்ரீ என்பவர் இயக்குகிறார்.

இந்த படத்தில் இடைவேளை என்பதே கிடையதாம். அதேபோல், இப்படத்தில் பாடல்களும் கிடையாதாம். இப்படம் குறித்த மேலும் பல தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்