Home / உலகம் / பிரான்ஸ் /

பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு: பலர் படுகாயம்- பிரான்சில் பயங்கரம்

Posted On : March 16, 2017

பிரான்ஸ் நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் மர்ம நபர் நுழைந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெற்கு பிரான்ஸில் உள்ள Grasse நகரில் Alexis de Tocqueville என்ற பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் சற்று முன்னர் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ளவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இச்சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், பள்ளி மாணவர்களை காப்பாற்றும் முயற்சியிலும் பொலிசார் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும், இது ஒரு தீவிரவாத தாக்குதலாக கூட இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments

தொடர்புடைய செய்திகள்