Home / உலகம் / பிரித்தானியா /

பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பொலிசார்

Posted On : March 16, 2017

சாதரணமாக பணம் எடுக்கும் ஏடிஎம் இயந்திரத்தில் சிறிய அளவிலான கேமராக்கள் பொருத்தப்பட்டு அதில் ஏடிஎம் கார்டின் ரகசிய எண்களை மோசடிக்காரர்கள் தெரிந்து கொள்வதாக லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான மத்திய லண்டனில் ஒரு தேவாலயத்தின் அருகே இருந்த ஏடிஎம்மில் உள்ள இயந்திரத்தில் ஒரு சிறிய அளவிலான கேமராவை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் எப்படி ஈடுபட்டுள்ளார்கள் என்பது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதே போன்று கடந்த 7 ஆம் திகதி இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், பார்ப்பதற்கு சாதரண ஏடிஎம் இயந்திரம் போன்று தான் இருக்கும் என்றும், ஆனால் ஏடிஎம் இயந்திரத்தில் உங்களது ரகசிய எண்களை அங்கு உள்ள சிறிய துளை அளவிலான கேமராவை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் எடுத்து விடுகின்றனர் என்றும் அதன் பின் உங்களது பணங்கள் அனைத்தையும் எடுத்துவிடுகின்றனர் என்று கூறியுள்ளனர்.

அதற்கான விளக்கப்புகைப்படத்தை கொடுத்து மக்கள் எச்சரிக்கையுடனே இருக்கும் படி தெரிவித்துள்ளனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்