Home / உலகம் / அவுஸ்ரேலியா /

விமானத்தில் ஹெட்ஃபோன் வெடித்து பெண்ணுக்கு காயம்

Posted On : March 16, 2017

ஆஸ்திரேலியாவில், நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, அதில் பயணம் செய்துகொண்டிருந்த பெண் காதுகளில் பொருத்தியிருந்த ஒலிக் கருவி (ஹெட்ஃபோன்) தீடீரென வெடித்ததில், அந்தப் பெண்ணின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இந்த விபத்தின்மூலம், பறக்கும் விமானத்தில் பேட்டரியில் இயங்கும் சாதனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயத்தைப் புரிந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்ததாவது: சீனாவின் பெய்ஜிங் நகரிலிருந்து, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை நோக்கி அண்மையில் ஒரு விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண், தனது காதுகளில் பேட்டரியால் இயங்கும் ஒலிக் கருவியைப் பொருத்தி, இசையைக் கேட்டவாறே உறங்கிக் கொண்டிருந்தார். விமானம் புறப்பட்ட இரண்டு மணி நேரத்தில், திடீரென ஏதோ வெடிப்பதைப் போன்ற பெரும் சப்தத்தை அந்தப் பெண் கேட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, தனது முகத்தில் தீ பரவுவதை உணர்ந்த அந்தப் பெண், காதில் பொருத்தியிருந்த ஒலிக் கருவியை கழற்றி எறிந்தார். கிழே விழுந்தும் அந்த கருவி தொடர்ந்து எரிந்துகொண்டிருந்தது. அதனை விமானப் பணியாளர்கள் வாளியில் தண்ணீர் எடுத்து வந்து உற்றி அணைத்தனர். எரியும் தலைமுடி, உருகும் பிளாஸ்டிக் வாடை அந்த விமானம் முழுவதும் பரவி, பயணம் முழுவதும் தொடர்ந்தது.

தரையிறங்கும்வரை பயணிகள் தொண்டையக் கணைத்துக் கொண்டும், இருமிக் கொண்டும் இருந்தனர். போட்டரிகள் தீப்பிடிக்கக் கூடியவை என்பதால், அதனால் இயங்கும் கருவிகளும் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. பயன்படுத்தாபோது பேட்டரிகளைக் கழற்றி தனியாக வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்