Home / உலகம் / கனடா /

கனேடிய தினத்தில் டூடூலின் தோற்றத்தை வடிவமைக்க மாணவர்களின் உதவியை நாடும் கூகுள்

Posted On : March 17, 2017

150ஆவது கனேடிய தினத்தை முன்னிட்டு பிரபல இணைய தேடுபொறியான கூகுள் நிறுவனம், தனது முகப்பக்கத்தில் தோன்றும் கூகுள் டூடூலின் தோற்றத்தை வடிவமைப்பதற்கு கனேடிய மாணவர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளது.

‘What I see for Canada’s future is’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இதன் தோற்றம் அமையவேண்டுமெனவும், பாலர் பாடசாலை மாணவர்கள் முதல் 12வது தரம் வரையிலான மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.

குறித்த டூடூலின் வடிவமைப்பானது படைப்பாற்றல், அசல் தன்மை ஆகியனவற்றினை அடிப்படையாக வைத்து தீர்மானிக்கப்படும். இந்த வடிவமைப்பு கூகுளின் முகப்பு பக்கத்தில் கனேடிய தினத்தன்று காட்சிப்படுத்தப்படும்.

வெற்றிபெறும் மாணவனுக்கு 10,000 டொலர்கள் கல்வி உதவித் தொகை, மாணவரின் பாடசாலைக்கு 10,000 டொலர்கள் தொழில்நுட்ப மானியம் மற்றும் அத்துடன் குறிப்பிட்ட வடிவமைப்பு ஜூன் 13ஆம் திகதி ரொறொன்ரோவில் எங்கு வெளிப்படுத்தப்படுகின்றதோ அங்கு செல்வதற்கு கட்டணம் செலுத்திய பயணவாய்ப்பு போன்றன வழங்கப்படும்.

Comments

தொடர்புடைய செய்திகள்