Home / உலகம் / தொழில்நுட்பம் /

ஆண்ட்ராய்டில் சூப்பர் மேரியோ ரன்: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்

Posted On : March 18, 2017

நின்டென்டோவின் சூப்பர் மேரியோ ரன் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை தொடர்ந்து ஆண்ட்ராய்டிலும் முன்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு பதிப்பு வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ:
நின்டென்டோ நிறுவனத்தின் சூப்பர் மேரியோ ரன் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் 2016, டிசம்பர் 15 இல் வெளியிடப்பட்டது. வெளியான நான்கே நாட்களில் சூப்பர் மேரியோ ரன் 40 மில்லியன் டவுன்லோடுகளை கடந்தது. ஐஓஎஸ் இயங்குதளத்தில் அமோக வரவேற்பு பெற்ற நிலையில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான சூப்பர் மேரியோ ரன் முன்பதிவு துவங்கியது.
முன்னதாக மார்ச் மாத வாக்கில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கூகுள் பிளே ஸ்டோரில் முன்பதிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்தோருக்கு வெளியீடு குறித்த தகவல்கள் அப்டேட் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான சூப்பர் மேரியோ ரன் மார்ச் 23 ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டில் சூப்பர் மேரியோ ரன் கேமின் 2.0 பதிப்பு வெளியிடப்பட இருக்கிறது. இதே போல் ஐஓஎஸ் இயங்குதளத்திலும் 2.0 அப்டேட் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒற்றை கையில் விளையாட கூடிய சூப்பர் மேரியோ ரன் கேமில், மேரியோ தொடர்ந்து முன்னேறுவதை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மேரியோ முன்னேற்றத்தை குறுக்கிடும் பல்வேறு இடையூறுகளை கடந்து ஒவ்வொரு லெவலையும் கேமர் கடக்க வேண்டும்.
குறிப்பிட்ட லெவல் வரை சூப்பர் மேரியோ ரன் இலவசமாகவே வழங்கப்படுகிறது. அதன் பின் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை செலுத்தி கேமினை தொடர்ந்து விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் இயங்குதளத்தை பொருத்த வரை வாடிக்கையாளர்கள் இந்த கேமிற்கு நல்ல விமர்சனங்களையே வழங்கி உள்ளனர். ஐஓஎஸ்-ஐ தொடர்ந்து ஆண்ட்ராய்டில் வெளியாக இருக்கும் சூப்பர் மேரியோ ரன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்