Home / உலகம் / தொழில்நுட்பம் /

இந்தியாவில் முதல் முறையாக அடிப்படை உரிமைகள் பட்டியலில் இண்டர்நெட்: கேரளா அதிரடி

Posted On : March 18, 2017

கேரளா மாநிலத்தில் உணவு, தண்ணீர் மற்றும் கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளின் பட்டியலில் இண்டர்நெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கென ரூ.1000 கோடி செலவில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உணவு, தண்ணீர் மற்றும் கல்வி போன்ற அடிப்படை தேவைகளின் பட்டியலில் இண்டர்நெட் இணைப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. கேரள பட்ஜெட்டில் மாநிலம் முழுக்க பெரும்பாலானோருக்கு இலவச இண்டர்நெட் வழங்கப்படும் என அம்மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் அறிவித்திருந்தார்.
கேரளாவில் சீரான இண்டர்நெட் இணைப்பு வழங்கும் நோக்கில் அம்மாநில மின்சார துறை அருகிலேயே ஆப்டிக் ஃபைபர் கேபிள் புதைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. கே – ஃபான் (K-Fon) என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் பிராட்பேண்ட் வழங்கவும், பொது இடங்களில் வை-பை ஹாட்ஸ்பாட்களை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டமானது 18 மாதங்களில் முழுமையாக முடிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கே போன் நெட்வொர்க் மூலம் அனைவருக்கும் இண்டர்நெட் வழங்கும் திட்டம் டிஜிட்டல் இந்தியா திட்டங்களை ஊக்குவிக்கும் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கேரளா பட்ஜெட்டில் சுமார்  20 லட்சம் பேருக்கு இலவச இண்டர்நெட் இணைப்பு வழங்கப்படும் என அம்மாநில நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். புதிய திட்டத்தின் மூலம் இண்டர்நெட் இணைப்பினை அடிப்படை உரிமையாக அறிவித்த முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்