Home / உலகம் / சுவிஸ் /

இயற்கை எழில் கொஞ்சும் சுவிஸ்: அழகில் மயங்கும் சுற்றுலா பயணிகள்

Posted On : March 18, 2017

சுவிட்சர்லாந்து சிறிய நாடாக இருந்தாலும் அதன் சுற்றுலா தளங்கள் சிறியதல்ல.

ஆல்பஸ் மலைகள், பனிப்பாறைகள் என சுவிஸின் முக்கிய சுற்றுலா தளங்கள் பல உள்ளன.

சுவிஸில் 200க்கும் மேற்பட்ட மலை சிகரங்கள் 3000 மீட்டரை விட உயர்ந்த சிகரங்களாக உள்ளது.

அத்துடன், நாட்டுப்புறக் கிராமப்புறங்கள், பண்டைய அரண்மனைகள், தெளிவான ஏரிகள், ஒவ்வொரு திசையிலும் திகைப்பூட்டும் வகையில் உள்ள மலை சிகரங்கள், பிராந்திய உணவு வகைகள் என சுற்றுலா பயணிகளை மலைப்பூட்ட வைக்கிறது சுவிஸ்.

ஜெர்மாட் பகுதியில் உள்ள மேட்டர்ஹார்ன்

பிரமிடு வடிவில் உள்ள மாபெரும் மலையான மேட்டர்ஹார்ன், உலகின் அதிகமுறை புகைப்படம் எடுக்கப்பட்ட மலைகளில் ஒன்றாக திகழ்கிறது.

4.478 மீட்டர் உயர்முடைய மேட்டர்ஹார்ன் மலையின் உச்சி சுற்றுலா பயணிகளை வேகுவாக ஈர்க்கிறது. ஜெர்மாட் உள்ள மலை நிலையத்திலிருந்து மேட்டர்ஹார்னுக்கு கேபிள் கார்கள் சேவை மூலம் பயணம் செய்ய முடியும்.

மான்ட்ரியக்ஸ் பகுதியில் உள்ள Chateau de Chillon கோட்டை

சுவிட்சர்லாந்தின் வரலாற்று கட்டிடங்களில் மிக முக்கியமான ஒன்றாக திகழும் Chillon கோட்டை ஜெனீவா ஏரி கரையில் சுவிஸ் ரிவியராவின் மைய பகுதியில் அமைந்துள்ளது.

Chillon கோட்டை 25 கட்டிடம், மூன்று முற்றங்கள் கொண்டுள்ளது. கோட்டைக்குள் 14ம் நூற்றாண்டு ஓவியங்கள், கோபுரங்கள், நிலத்தடி சேமிப்பு பெட்டகங்களில், படுக்கையறைகள், ஆயுதங்கள் மற்றும் மரச்சாமான்கள் அசல் வடிவத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மான்ட்ரியக்ஸ் நகரத்தில் இருந்து படகு, பேருந்து அல்லது நடைபயணம் மூலம் Chillon கோட்டையை அடைய முடிகிறது.

ஜங்க்ப்ராவ் பகுதி

அல்பைனின் அற்புதமாக இருக்கும் ஜங்க்ப்ராவ், அதிக சாகசங்களை கொண்ட சுற்றுலா தளமாக திகழ்கிறது.

உறைபனி monoliths, Monch மற்றும் பச்சை புல்வெளிகள், மலை பாதைகள் நிறைந்த Eiger ஆகிய மூன்றும் பயணிகளை மயக்கும் காட்சிகளாக அமைந்துள்ளது.

Grindelwald, Murren, Wengen மற்றும் Lauterbrunnen ஆகிய நகரங்கள் ஜங்க்ப்ராவ் பகுதியின் சிறப்பம்சங்கள். ஜங்க்ப்ராவ் ரயில் பயணம் மூலம் வாழ்க்கையில் மறக்க முடியாத அழகான காட்சிகளை பார்த்து ரசிக்க முடியும்.

Zernez பகுதியில் உள்ள சுவிஸ் தேசிய பூங்கா

ஸ்க்விசிரிஸ்கர் தேசிய பூங்கா, பனி இழைத்துள்ள பனிப்பாறைகள், பசுமையான மேய்ச்சல், நீர்வீழ்ச்சிகள் மற்றும் காடுகள் என சுமார் 172 சதுர கிலோமீட்டர் கொண்டுள்ளது.

பூங்காவில் மொத்தம் 21 பாதைகளில் நடைபயணம் மேற்கொள்ள வசதி உள்ளது. இதன் போது பார்வையாளரகளின் அரிய தங்கக் கழுகுகள், மலை ஆடு, சிறப்பு வாய்ந்த தாவரங்கள் என அனைத்தையும் பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைக்கும்.

ஜெனீவா ஏரி

கிழக்கே ஜெனிவாவும், மேற்கே Lausanneயும் அணைத்துள்ளது ஜெனிவா ஏரி.

582 சதுர கிலோமீட்டர் உள்ள ஏரி, அதன் கரையோரங்களில் மற்றும் மலைப்பகுதிகளில் திராட்சத்தோட்டங்களையும் நீண்டு ஆடம்பரமான விசித்திர chareaus கொண்டுள்ளது.

ஏரியில் படகுகள் மூலம் சவாரி மேற்கொள்ளலாம். ஜுரா மலைகள் மற்றும் Vaudoise ஆல்ப்ஸ் அல்லது அழகான மாணவர் நகரமான லாசன்னே ஆராய ஒரு பெரிய தொடக்க புள்ளியாக உள்ளது ஜெனீவா ஏரி.

லுகானோ

தெற்கில் இத்தாலியின் எல்லைக்கு அருகே அமைந்துள்ள லுகானோ பயணம் ஒரு மாறுப்பட்ட சுவிட்ச்சர்லாந்தை காட்டுகிறது.

அருங்காட்சியகங்கள், நியோகிளாசிக்கல் அரண்மனை உட்பட பல பாரம்பரிய தளங்கள், பிரம்மாண்ட கட்டிடங்கள் ஆகியவை லுகானோவின் சிறப்பம்சங்கள்.

சுவிட்சர்லாந்தின் மான்டு கார்லோ என்றழைக்கப்படும் வடக்கில் உள்ள அழகான லுகானோ ஏரி பிரபலங்கள் அதிகம் வரும் ஒரு பகுதியாக உள்ளது.

பெர்ன் நகரம்

வரலாற்று நகரமான பெர்ன் சுவிட்சர்லாந்தின தலைநகர் என பல பேருக்கு தெரியாமல் கூட இருக்கலாம். யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளம் என பெயரிடப்பட்ட பெர்னின பழைய நகரத்தில் ஒவ்வொரு மூலையிலும் வரலாற்று சின்னங்கள் இருக்கும்.

புராதான கோபுரங்கள், மணற்கல் கட்டிட முகப்பு, பல நீருற்றுக்கள், பார்கள், கபேக்கள் மற்றும் கபரெட் நிலைகளால் நிரப்பப்பட்டது பெர்ன். சுவிச்சர்லாந்தின் மிகவும் நன்கு பராமரிக்கப்படும் வரலாற்று மையங்களில் பெர்ன் ஒன்றாகும்.

அதுமட்டுமின்றி தாவரவியல் பூங்கா, ஒரு வண்ணமயமான வாராந்திர சந்தை, ஆரே நதி மற்றும் கரடிகள் பூங்கா ஆகியவை பெர்ன் நகரின் சின்னமாக திகழ்கிறது.

லூசெர்ன் நகரம்

சுவிட்சர்லாந்தின் மைய பகுதியாக லூசெர்ன் நகரம் உள்ளது. மலைத்தொடர்களாக அமைந்துள்ள பனோரமா பகுதியாக லூசெர்ன் திகழ்கிறது.

கோட்டை போன்ற கோபுரங்கள், மர பாலங்கள் பழங்கால ஓவியங்கள், தேவாலயங்கள் என பாரம்பரிய கொண்ட அழகான சுற்றுலா தளமாக லூசெர்ன் திகழ்கிறது.

லூசெர்ன் அருகே உள்ள Mt Pilatusயின் உச்சிக்கு பயணம் செய்வதின் மூலம் லூசெர்ன் நகரின் முழு அழகையும் கண்டு மகிழலாம்.

ரைன் அருவி

ஐரோப்பாவின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியான ரைன் அருவி, சுற்றுலா பயணிகளின் மனதை மயக்கும் இயற்கை அதிசயம் ஆகும்.

வடக்கு பகுதியில் உள்ள Schaffhausen நகரத்திற்கு அருகே உள்ள வலிமைமிக்க நீர்வீழ்ச்சி 150க்கும் மேற்பட்ட மீட்டர் அகலம் பாய்கிறது.

சுற்றுலா பயணிகள் ஓடத்தை வாடகைக்கு எடுத்து அருகிலுள்ள அரண்மனைகளுக்கு பயணிக்க முடியும். சுவிஸ் தேசிய தினமான ஆகஸ்ட் 1ம் திகதி சுற்றுலா பயணிகளை கவர ரைன் அருவியில் வாணவேடிக்கை நடத்தப்படும்.

சூரிச் நகரம்

உலகின் மிக சிறந்த வாழத்தகுந்த நகரங்களில் ஒன்றாக அறியப்படும் சூரிச் நகரம் சுவிட்சர்லாந்தின் கலாச்சார மையமாக திகழ்கிறது.

கிலட் வீடுகள், Grossmünster தேவாலயம், தேசயி அருங்காட்சியகம் என சில வரலாற்று சின்னங்கள் என பழைய பாரம்பரிய தளங்கள், 50க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் மற்றும் 100 கலை காட்சியகங்கள் உள்ளது. இதுமட்டுமின்றி சுவிட்சர்லாந்தில் இன்னும் பல சுற்றுலா தளங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Comments

தொடர்புடைய செய்திகள்