Home / பல்சுவை / சமையல் /

சாமை சர்க்கரைப் பொங்கல்

Posted On : March 18, 2017

என்னென்ன தேவை?

சாமை அரிசி (புதியது) – 200 கிராம்,
வெல்லம் – 200 கிராம்,
தண்ணீர் – 2-3 டம்ளர்,
பால் – 1 கப்,
தேங்காய்த்துருவல் அல்லது தேங்காய் பல் பல்லாக நறுக்கியது – 1/2 கப்,
பாசிப்பருப்பு – 100 கிராம்,
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்,
நெய் – 1/2 கப்,
முந்திரி, திராட்சை – தலா 15.

 

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் பாசிப்பருப்பை வாசனை வரும்வரை வறுக்கவும். சாமை அரிசி, பாசிப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். அரிசி, பருப்பு வெந்து குழைந்து வரும்போது வெல்லத்தை கரைத்து வடித்து சேர்க்கவும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை, தேங்காய்த்துருவலை வறுத்து பொங்கலில் சேர்க்கவும். அனைத்தும் சுருண்டு வரும் போது பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும். அலங்கரித்து படைத்து பரிமாறவும். குறிப்பு : விரும்பினால் தினை, குதிரைவாலியிலும் செய்யலாம்.

Comments

தொடர்புடைய செய்திகள்