Home / உலகம் / சுவிஸ் /

சுற்றுலா சென்றபோது நிகழ்ந்த சோகம்: பனிச்சரிவில் சிக்கி 4 வாலிபர்கள் பலி

Posted On : March 18, 2017

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 4 வாலிபர்கள் பனிச்சரிவு விபத்தில் சிக்கி பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸில் உள்ள ஆர்கவ் மாகாணத்தை சேர்ந்த 8 வாலிபர்கள் ஆஸ்திரியா நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

கடந்த புதன் கிழமை அன்று ஆஸ்திரியாவில் உள்ள Tyrol பகுதியில் பனிச்சறுக்கு விளையாட சென்றுள்ளனர்.

நால்வரும் சுமார் 2,450 அடி உயரத்தில் இருந்து பனிச்சறுக்கில் ஈடுப்பட்டுருந்தபோது திடீரென பனி மலை சரிந்து விழுந்துள்ளது.

இதனை சற்றும் எதிர்பார்க்காத 8 பேரும் அங்கிருந்து உடனடியாக தப்பிக்க முயன்றுள்ளனர்.

ஆனால், துரதிஷ்டவசமாக 8 பேரில் நால்வர் பனிச்சரிவில் புதைந்துள்ளனர்.

மூவரின் சடலங்கள் உடனடியாக மீட்கப்பட்டது. ஆனால், நான்காவது நபரின் சடலம் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு கிடைத்துள்ளது.

உயிர் பிழைத்த நால்வரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து ஆஸ்திரியா மாகாண மேயர் பேசியபோத், ‘சுவிஸ் நாட்டை சேர்ந்த நான்கு வாலிபர்கள் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து சுவிஸ் நாட்டிற்கு முறையாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுப்படுபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு மேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும், உயிரிழந்த நபர்கள் தொடர்பான கூடுதல் தகவல்களை பொலிசார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்