Home / உலகம் / சுவிஸ் /

சுவிஸில் ஒவ்வொரு துறையில் எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது?: இதே விரிவான பட்டியல்

Posted On : March 18, 2017

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையிலும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

சுவிஸ் நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் துறையைச் சேர்ந்த அலுவலகம் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஊழியரின் பணி மற்றும் அவர் பெறும் சராசரி மாதாந்திர ஊதியம் மற்றும் வருமானத்தின் பட்டியல் இதோ!(ஊதியம் சுவிஸ் பிராங்க்)

  1. தலைமுடியை திருத்துபவர் – 2,601
  2. பூ வியாபாரி – 3,800
  3. கிராபிக் டிசைனர் – 3,800
  4. கடை ஊழியர் – 3,900
  5. தச்சு/மரவேலை செய்பவர் – 4,018
  6. தபால் ஊழியர் – 4,031
  7. ரொட்டி தயாரிக்கும் ஊழியர் – 4,051
  8. கார் மெக்கானிக் – 4,450
  9. விவசாயி – 4,500
  10. ரயில் கண்டக்டர் – 4,558
  11. மென்பொருள் தயாரிப்பாளர் – 4,608
  12. பேருந்து ஓட்டுனர் – 4,858
  13. பற்களை தூய்மை படுத்துப்பவர் – 4.930
  14. கால்பந்து விளையாட்டு வீரர் – 5,400
  15. கட்டிட பொறியாளர் – 5,411
  16. ஊடகவியலாளர் – 5,551
  17. சமூக சேவகர் – 6,246
  18. விமானி – 6,576
  19. முதன்மை பள்ளி ஆசிரியர் – 7,398
  20. வங்கி கிரிடிட் மற்றும் ரிஸ்க் மேலாளர் – 7,788
  21. ராணுவ அதிகாரி – 8,142
  22. கிறித்துவ மத போதகர் – 9,084
  23. அரசு வழக்கறிஞர் – 10,400
  24. தலைமை மருத்துவர் – 12,824
  25. கேபினட் அமைச்சர் – 37,083

Comments

தொடர்புடைய செய்திகள்