Home / பல்சுவை / சமையல் /

தினை காய்கறி கிச்சடி

Posted On : March 18, 2017

என்னென்ன தேவை?

தினை ரவை – 250 கிராம்,
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – 10 கிராம்,
இஞ்சி – 20 கிராம்,
பூண்டு – 20 கிராம்,
நறுக்கிய வெங்காயம் – 50 கிராம்,
தக்காளி – 50 கிராம்,
பச்சைமிளகாய் – 2,
கேரட், பீன்ஸ், பட்டாணி – 100 கிராம்,
புதினா – சிறிது,
எண்ணெய் – 100 மி.லி.,
உப்பு – தேவையான அளவு,
தண்ணீர் – 750 மி.லி.,
சோம்பு – 20 கிராம்,
நெய் – சிறிது,
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்.

 

எப்படிச் செய்வது?

கடாயில் நெய் விட்டு தினை ரவையை லேசாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். பின்பு இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள்தூள், உப்பு, தக்காளி, புதினா, கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து வதக்கவும். நன்கு வதக்கியதும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் தினை ரவையை சேர்த்து, கெட்டியாகும் வரை மிதமான சூட்டில் கிளறி விடவும். பிறகு கடாயை மூடிவைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும். சூடாக அலங்கரித்து பரிமாறவும்.

Comments

தொடர்புடைய செய்திகள்