Home / உலகம் / பிரான்ஸ் /

நாம் எப்போதும் நண்பர்கள் தான்: பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்த வில்லியம்

Posted On : March 18, 2017

பிரான்ஸ் ஜனாதிபதியுடன் சந்திப்பை மேற்கொண்ட இளவரசர் வில்லியம் இரு நாட்டு உறவுகளை பற்றி பேசியுள்ளார்.

பிரித்தானியாவின் இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் உடன் பிரான்ஸ் நாட்டுக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார். பிரான்ஸின் பாரீஸில் வில்லியம், ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட்வுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவரிடம், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகினாலும் பிரான்ஸ் நாட்டுக்கும் பிரித்தானியாவுக்கும் உண்டான நட்பில் மாற்றம் இருக்காது. மற்ற நட்பு நாடுகளை போன்று நாமும் திகழ வேண்டும் என வில்லியம் கூறினார்.

அப்படி இருந்தால் தான் இரு நாடுகளும் வளமான மற்றும் புதுமையான விடயங்களை நோக்கி பயணிக்க முடியும் என கூறியுள்ளார். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா அதிகாரப்பூர்வமாக விலகவுள்ள நிலையில் இருவரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

Comments

தொடர்புடைய செய்திகள்