Home / பல்சுவை / சமையல் /

மொச்சை பொறியல்

Posted On : March 18, 2017

என்னென்ன தேவை?

ஃப்ரெஷ் மொச்சை – 1 கப்
வெங்காயம் – 1
பூண்டு – 2 பல்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
சாம்பார் தூள் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
சீரகம் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 1
எண்ணெய் – 2 தேக்கரண்டி

 

எப்படிச் செய்வது?

போதுமான அளவு தண்ணீரில் மொச்சையை குக்கரில் எடுத்து 3 விசில் விட்டு வேக விடவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், வெட்டி வைத்த பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் சாம்பார் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். இப்போது வேக வைத்த மொச்சையை மசாலாவோடு சேர்த்து கிளறி பரிமாறவும்.

Comments

தொடர்புடைய செய்திகள்