Home / சினிமா / ஹாலிவுட் /

6 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்ற லா லா லேண்ட் திரைப்படம்

Posted On : March 18, 2017

லா லா லேண்ட் திரைப்படம் 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. லா லா லேண்ட் திரைப்படம் 14 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில் 6 விருதுகளை வென்றுள்ளது. 89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் பல நாடுகளைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர்கள் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளனர். சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், ஒளிப்பதிவு, பின்னணி இசை, பாடல், தயாரிப்பு வடிவமைப்பு பிரிவுகளில் விருது வென்றுள்ளது.

சிறந்த நடிகை : எம்மா ஸ்டோன் (லா லா லேண்ட்)

சிறந்த இயக்குநர் டேமியன் (லா லா லேண்ட்)

சிறந்த ஒளிப்பதிவு : லா லா லேண்ட்

சிறந்த பின்னணி இசை : லா லா லேண்ட்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு : லா லா லேண்ட்

சிறந்த பாடல் சிட்டி ஆஃப் ஸ்டார்ஸ் (லா லா லேண்ட்)

Comments

தொடர்புடைய செய்திகள்