Home / உலகம் / அவுஸ்ரேலியா /

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது டெஸ்ட்: உணவு இடைவேளையில் இந்தியா 435/6

Posted On : March 19, 2017
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல் ஆகியோரது சதங்களின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 451 ரன்கள் சேர்த்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்று 3–வது நாள் ஆட்டத்தில் நிதானபோக்கை கடைபிடித்தது. இந்திய வீரர்கள் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். இந்தியா 6 விக்கெட்களை இழந்து இருந்த நிலையில் புஜாரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் ரன் கணக்கை உயரச்செய்தார். புஜாரா 11–வது சதத்தை நிறைவு செய்தார்.
நடப்பு தொடரில் சதத்தை பதிவு செய்த முதல் இந்தியர் இவர் தான். 7–வது விக்கெட்டுக்கு இறங்கிய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும் ஓரளவு ஒத்துழைப்பு தந்ததால் மேற்கொண்டு இந்திய அணி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. 3–வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் குவித்தது. இரு அணிகளில் யாருடைய கை ஓங்கி இருக்கிறது என்பதை கணிக்க முடியாத அளவுக்கு போட்டி சென்றதையடுத்து 4–வது நாளான இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்பட்டது.
இன்றைய போட்டியிலும் புஜாரா மற்றும் விருத்திமான் சஹா கூட்டணியானது வெற்றிக் கூட்டணியாக நகர்ந்து வருகிறது. இந்திய அணி இன்று 4 வது நாள் ஆட்ட உணவு இடைவேளை வரையில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 435 ரன்களை எடுத்து உள்ளது. ஆஸ்திரேலியா அணியைவிட 16 ரன்கள் மட்டுமே பின்தங்கி உள்ளது. புஜாரா 150 ரன்களை கடைத்து ரசிகர்களுக்கு விருது படைத்து வருகிறார். புஜாரா 164 ரன்களுடனும், விருத்திமான் சஹா 59 ரன் களுடனும் விளையாடி வருகின்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்