Home / சினிமா / இந்திய சினிமா /

சந்திர ஹாசன் மறைவுக்கு நடிகர் கமலஹாசன் இரங்கல்

Posted On : March 19, 2017
லண்டனில் உள்ள மகள் அனுஹாசன் வீட்டில் சந்திர ஹாசன் தங்கி இருந்தார். அங்கு இரவு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. கமலஹாசன் சகோதரர் சந்திரஹாசன், கமலஹாசனின் 2-வது சகோதரர் ஆவார். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியாகவும் இருந்தார். சந்திரஹாசனின் மனைவி கீதாமணி கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதி சென்னையில்  உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அதன் பிறகு சந்திரஹாசன் லண்டனில் வசிக்கும் மகள் அனுஹாசன் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் மகள் அனுஹாசனின் வீட்டில் தங்கியிருந்த போது அவருக்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவரது உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள்  அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சந்திஹாசன் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் லண்டன் செல்வதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளதாக உறுதிப்படுத்தபடாத தகவல்கள் தெரிவிக்கின்றன.  மறைந்த சந்திரஹாசனுக்கு அனுஹாசன், நிர்மல் ஹாசன் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளன.
இந்நிலையில் மூத்த சகோதரர் சந்திரஹாசன் மறைவுக்கு நடிகர் கமலஹாசன் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
நண்பனாய், நல்ல ஆசானாய், தமயனும் தகப்பனுமாய் அவரை பெற்றதால் உற்றது நல்வாழ்வு. எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியை கூட நான் நிறைவேற்றவில்லை.

Comments

தொடர்புடைய செய்திகள்