Home / உலகம் / ஜேர்மனி /

ஜி20 நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் வர்த்தகம், பருவநிலை விவகாரத்தில் அமெரிக்க நிலை குறித்து ஆலோசனை

Posted On : March 20, 2017

பெர்லின்: ஜெர்மனியில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில், வர்த்தகம் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட விவகாரத்தில் அமெரிக்க நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடந்தது.பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஜப்பான்,  மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர், சிலி, புருனே, நியூசிலாந்து, கனடா,  மெக்சிக்கோ, பெரு உள்ளிட்ட 12 நாடுகளோடு அமெரிக்க செய்து கொண்டுள்ள  டிரான்ஸ் பசிபிக் கூட்டு ஒப்பந்தத்தை அந்நாட்டு அதிபர் டிரம்ப்  கையெழுத்திட்டார். இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவை விட மற்ற  நாடுகளே அதிகம் பயனடைகிறது என்பது டிரம்பின் கருத்தாகும். மேலும், பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் குறித்தும் அமெரிக்கா அவநம்பிக்கையில் உள்ளது. சுற்றுப்புறச்சூழல் தொடர்பான நிதிகளையும் தனது பட்ெஜட் பரிந்துரையில் டிரம்ப் குறைத்துள்ளார்.

இந்த நிலையில், உலகின் பெரிய பொருளாதாரத்தை கொண்ட ஜி20 கொண்ட நாடுகளின் நிதி அமைச்சர்களின் 2 நாள் சந்திப்பு ஜெர்மனியின் பாடன்-பாடன் நகரில் தொடங்கியது. கடைசி நாளில் அந்த கூட்டத்தில், வர்த்தகம் மற்றும் பருவநிலை விவகாரத்தில் அமெரிக்க நிலை குறித்து விவாதித்தனர். மேலும், அமெரிக்காவின் இந்த செயல்பாடுகளை தடுத்து நிறுத்துவது குறித்த ஆலோசனை செய்தனர். இருப்பினும் கூட்டத்தின் முடிவில் எந்தவிதமான ஒருமித்த முடிவுகளும் எட்டப்படவில்லை.

Comments

தொடர்புடைய செய்திகள்