Home / உலகம் / பிரித்தானியா /

பிரித்தானியாவில் வசிக்கும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் இந்துஜா சகோதரர்கள் முதலிடம்

Posted On : March 20, 2017

பிரித்தானியாவில் வசிக்கும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில், இந்துஜா சகோதரர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

101 பேர் இடம்பெற்ற பிரித்தானியாவில் வசிக்கும் ஆசிய பணக்காரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் இந்துஜா சகோதரர்கள் முதலிடத்தில் உள்ளனர். அவர்களது சொத்து மதிப்பு 1,900 கோடி பவுண்ட்ஸ் ஆகும்.

இவர்களுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் லட்சுமி மிட்டல் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 1260 கோடி பவுண்ட்;ஸ், 3வது இடத்தில் பிரகாஷ் லோகியா உள்ளார். இவரது சொத்து மதிப்பு 400 கோடி பவுண்ட்ஸ் ஆகும்.

ஆசிய பணக்காரர் பட்டியலில் முதல் மூவரும் இந்தியர்கள் ஆவார். இந்துஜா சகோதரர்களின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டை விட 250 கோடி பவுண்ட்ஸ் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Comments

தொடர்புடைய செய்திகள்