Home / உலகம் / பிரித்தானியா /

பிரித்தானிய வரலாற்றில் மோசமான நிகழ்வு 1947இல் இடம்பெற்றது: ஆய்வாளர்கள்

Posted On : March 20, 2017

பிரித்தானியாவில் கடந்த 1947 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தமே அந்நாட்டின் வரலாற்றில் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தியதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஆண்டில் இதுவரையும் இல்லாத வகையில் 1.5 மீற்றர் அளவில் பனிமழை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதன்காரணமாக வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தில் பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 3 லட்சம் ஹெக்டேயர் பரபரப்பளவைக் கொண்ட பகுதிகள் வெள்ளதில் மூழ்கியதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும், அனர்த்தம் காரணமாக நோட்டிங்ஹம்ஷயரில் 14 ஆயிரம் வீடுகளும், மெய்டன்ஹெட்டில் 1400 வீடுகளும் ஒக்ஸ்ஃபோர்ட்டில் 3000 வீடுகளும் வின்ட்ஸரில் 1350 வீடுகளும் என பெருமளவான வீடுகள் முற்றிலும் அழிவடைந்ததாகவும் வரலாற்று பதிவுகள் குறிப்பிடுகின்றன.

அதுமட்டுமின்றி 45 ஆயிரம் வர்த்தக கட்டடங்களும் முற்றாக அழிவடைந்தன. இதன்காரணமாக சுமார் 7 ஆயிரம் தொழில்கள் பாதிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டது. அதேவேளை நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட பாதிப்புக்களால் 2,76,000 வியாபார ஸ்தாபனங்கள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட இந்த வெள்ளத்தால் சுமார் 300 மில்லியன் பவுண்ட்ஸ்இழப்பு ஏற்பட்டதாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சேத மதிப்பீட்டின் போது, சுமார் 4.5 பில்லியன் பவுண்ட்ஸ் வரை அரசுக்கு தேவைப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

Comments

தொடர்புடைய செய்திகள்