Home / உலகம் / ஜேர்மனி /

பெருந்தொகையான டொலர்களுக்கு விலைபோன ஹிட்லரின் புகைப்படங்கள்

Posted On : March 20, 2017

ஜேர்மனியின் சர்வாதிகாரியனான அடால்ஃப் ஹிட்லர், தற்கொலை செய்வதற்கு முன்பாக பதுங்கியிருந்த பதுங்கு குழியில் இருந்து மீட்கப்பட்ட அவரது புகைப்படங்கள், சுமார் 41,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன.

கடந்த 1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதி வாரம், ஜேர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ள பதுங்கு குழியில், தனது காதலி ஈவா பிரவுனுடன் தனது கடைசி காலத்தை கழித்து கழித்துவந்தார்.

அந்த காலக்கட்டத்தில் இரண்டாம் உலகப்போர் உக்கிரமடைந்திருந்த போது ஜேர்மனியின் பெர்லின் நகரை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்தனர். அப்போது ஹிட்லரும் அவரது காதலி ஈவா பிரவுனும் அந்த பதுங்குழியில் தனது உயிரை மாய்த்துக்கொண்டனர்.

அப்போது அந்த பதுங்குழியில் இருந்து மீட்கப்பட்ட அவரது புகைப்படங்களே தற்போது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன.

Comments

தொடர்புடைய செய்திகள்